Tuesday, June 21, 2016

மகாத்மாகாந்திஜி --இந்த காஞ்சி மட சங்கராச்சர்யாரை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவருள்







தென்னிந்தியாவுக்கு 1927 பிற்பகுதியில் வந்தார். யாரோ சொல்லி கேள்விப்பட்டு வெகு ஆர்வமுடன் இந்த காஞ்சி மட சங்கராச்சர்யாரை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அவருள் ஏற்பட்டது. விசாரித்ததில் அப்போது விஜய யாத்ரையில் பரமாச்சர்யார் கேரளாவில் நெல்லிச்செரி என்கிற ஊரில் தங்கியிருக்கிறார் என்று அறிந்தார்.


மகாத்மாகாந்திஜி பாலகாட்டில் நெல்லிச்செரி சென்றநாள் 15.10.1927.
''இங்கே காஞ்சி பரமாச்சார்யர் எங்கே தங்கியிருக்கிறார்?''
''பாபுஜி அவர் அதோ அந்த மாட்டுத் தொழுவத்தில் தான் வாசம் பண்ணுகிறார்''
''மாட்டுத் தொழுவத்திலா? ஜகத் குருவா?''
''அவர் எங்கும் இது போன்ற இடத்தில் தான் தங்குகிற சந்நியாசி''
பசுமாட்டுத் தொழுவத்தில் வாசலில் வந்து நின்ற மகாத்மாவை பரமாச்சாரியார் வரவேற்றார். காந்திக்கு இது ஒரு புது அனுபவம். கதரில் நெய்த, காவி உடையில், ஆதி சங்கரரின் வாரிசாக, மாலை வெயிலில் முகம் பொன்னிறமாக ஜொலிக்க புன்னகை அணிந்து நின்ற சிறிய உருவம் காந்தியை ஒரு கலக்கு கலக்கியது. உருகிப்போய் விட்டார். இரு கரங்களும் தானாகவே உயர்ந்தன. சேர்ந்தன. அவற்றின் பக்தி த்வனி அலாதியாக வெளிப்பட்டது, பேச்சின்றி. பேச்சுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆனந்தானுபவம் அவருக்கு.
பரமாசார்யருக்கோ, இந்த நாடு செய்த புண்யத்தால் தோன்றி, வெகு எளிமையின் சின்னமாக, சத்யஸ்வரூபமாக நாட்டின் சுதந்திர விழிப்பின் தலைவன், இந்த மாபெரும் தேசத்தில் ஒரு ஏழை விவசாயியின் கோலத்தைக் கொண்டவரைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.


மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு பரமாச்சார்யரை சந்தித்ததில் ஆனந்தம்.
''தாங்கள் அமர வேண்டும்'' என்றார் ஆச்சார்யர்.
தனது மதிப்பையும் மரியாதையும் வணக்கத்தையும் காந்திஜி ஆச்சர்யருக்கு தலை குனிந்து மனப்பூர்வமாக அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார்.
நிசப்தத்தில் பரிபூர்ண அமைதியில் இரு உயர்ந்த உள்ளங்கள் கலந்தன. ஒன்றின. சில நிமிஷ ஆன்ம விசாரத்திற்குப் பிறகு, சம்பாஷணை துவங்கியது.
''ஸம்ச்க்ரிதத்திலேயே பேசுவோமா?''என்றார் ஆசார்யர்.
''நீங்கள் ஸம்ச்க்ரிதத்திலேயே பேசுங்கள். நான் புரிந்துகொள்ள முடியும். நான் ஹிந்தியில் பதில் சொல்கிறேனே.'' என்றார் தேச பிதா.
''ஆஹா, அப்படியே பேசுவோமே. எனக்கும் அந்த பாஷையில் நீங்கள் பேசுவது புரிந்து கொள்ள முடியும்.''
மூன்றாம் மனிதர் ஒருவர் இல்லாமல் இரு மனித ரூப தெய்வங்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சம்பாஷித்தனர். இன்று நான் இதை எழுதும் வரை என்ன பேசினார்கள் இருவரும் என்று ஒருவருக்கும் தெரியாது.



காந்திஜியோடு உடன் வந்திருந்த ராஜாஜி வெளியே தான் நின்று கொண்டிருந்தார். மணியோ 6 ஆகப்போ கிறது. காந்திஜி இரவு உணவு அருந்தும் நேரம் அது. 6 மணிக்குப் பின் அவர் எந்த உணவும் அருந்த மாட்டாரே. ராஜாஜிக்கு கவலை. 6 மணிக்கு சில நிமிஷங்கள் முன்பு மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார். இருவரையும் வணங்கிவிட்டு
''பாபுஜி நீங்கள் உணவு அருந்தும் நேரம்'' என்று நினைவூட்டினார்.
''கைகளை உயர்த்தி, நிறுத்து என்ற சைகையில் காந்திஜி ராஜாஜியிடம் ''இந்த மகானோடு நான் அனுபவித்த சம்பாஷணையே எனது இன்றைய உணவு. உள்ளம் வயிறு இரண்டும் நிரம்பியிருக்கிறதே'' என்றார்,.
''சுவாமிஜி நான் விடைபெறுகிறேன் நன்றி''
''எனக்கும் ரொம்ப சந்தோஷம். இந்தாருங்கள். ஒரு பொன்னிற ஆரஞ்சு பழம் நீட்டினார் மஹா பெரியவர்.
''எனக்கு ஆரஞ்சு ரொம்ப பிடிக்கும்' மீண்டும் நன்றி'' என்று புன்னகையோடு பெற்றுக்கொண்டு சென்றார் காந்திஜி.
அன்று கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா பெரியவா என்ன பேசினார்கள் என்று நிறைய பேர் ஆவலாக கேட்டதற்கு தேச பிதா கூட்டத்திற்கு
''எனக்கு ஆன்ம திருப்தி கிடைத்த ஒரு சந்திப்பு. எனது எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைத்தது'' என்ற பதிலே கிடைத்தது.
பல வருஷங்களுக்கு அப்புறம், 1968ல் நவம்பர் மாதம் ஒரு விழாவில் பரமாச்ர்யசாரிடம் சிலர் நீங்கள் மகாத்மாவோடு பேசியது பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அப்போது அவர் காந்திஜி பாலக்காடு வருவதற்கு சில நாட்கள் முன்பு கொல்லப்பட்ட ஆர்ய சமாஜ் துறவி சுவாமி ஸ்ரத்தானந்தாவைப் பற்றியும் பேசினோம். அப்போது காந்திஜி இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்திலும் நேரிடலாம். கொலையாளிகள் மீது எனக்கு எக்காலத்திலும் வெறுப்போ,கோபமோ பகை உணர்ச்சியோ தோன்றாமல் அவர்களை அன்போடு அணைக்க எண்ணம் உருவாக வேண்டும் என்பது என் வேண்டுதல் சுவாமி. இதைபெற நான் முயற்சிப்பேன் '' என்று கூறினார்.
பரமாச்சார்யர் தொடர்ந்து இந்த 'பூலோகத்தில் இப்படி ஒரு அபூர்வமான '' பகைவனுக்கும் அருள்வதற்கு நெஞ்சம் வேண்டும். என்று நினைத்து அதை அடைந்து கடைப்பிடித்தவர் ஒருவர் அரிது '' என்றார்.


..

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!



Thanks to Facebook : Sudha  Viswanathan

Friday, April 29, 2016

Education assistance for a Child.







Dear All

Last year  all Mahaperiyava Bhaktas here contributed to the education of  a 2nd std. girl from ranipet.

She passed in her exams with good marks and she is going to second std. this year. Hence need your  help once again pls. help.

Fees comes to  Rs.25,000/-  per year.

Mother alone employed  for Rs.4,000/- at lawyer office in Ranipet.

 S.Manjula 
Bank name : UCO bank 


Savings Account no.   05680100062880

Branch  : I CF branch  ( Chennai )   ( account created in chennai 6 yrs. back)

IFSC Code: UCBA0000568

MICR Code: 600028006
Branch Code: 000568



Even your  contribution of Rs,500 or  Rs.1000  matters the most. --  please help.

Do mail me the amount you have deposited so that I need to prepare a list  of donors and  need to display which is my duty given by Mahaperiyava.. 
My contact details.  R.Narayanan - Saidapet , chennai - mob: 9176081976

Namaskaram to all Mahaperiyava.

Regards

R.Narayanan
9176081976

சூரிய கிரகணம் -- “ராமநாதபுரம் ராஜா சொன்னார்: ”உங்கள் காலில் அபூர்வ ரேகைகள் இருக்கின்றன



படித்ததில் பிடித்தது
பெரியவாள் சூலூர்பேட்டையில் தங்கியிருந்த போது ஒரு சூரிய கிரகணம் வந்தது.
தற்செயலாக அன்றைய தினம் நாங்கள் தரிசனத்துக்குச் சென்றிருந்தோம். கிரகணம் பிடிக்கும் போது செய்ய வேண்டிய ஸ்நானத்துக்காக அப்போது அங்கிருந்தவர்களுடன் சற்றுத் தொலைவிலிருந்த ஓர் ஆற்றுக்குப் போனார்கள் பெரியவாள்.
நீராடுவதற்கு முன் செய்யவேண்டிய சங்கல்பத்தைச் சொல்லக்கூடிய பண்டிதர் யாரும் அந்தக் கூட்டத்தில் இல்லை.எங்களுக்குப் பெரியவாளே சங்கல்பம் செய்து வைத்தார்கள்!
நீராடிவிட்டு ஸ்ரீமடத்துக்கு எல்லோரும் திரும்பி விட்டோம். பின் விமோசன ஸ்நானம் செய்வதற்காக ஒரு திருக்குளத்துக்குச் சென்றோம்.







போகும் வழி நெடுகிலும் நெருஞ்சி முள். பெரியவாள் பாதங்களில் நெருஞ்சி முட்கள் குத்திப் படாதபாடு படுத்திவிட்டன.குளத்தின் ஒரு படிக்கட்டில் பெரியவாள் உட்கார்ந்து கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு சாட்சாத் தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி தந்து கொண்டிருந்தார்கள்.
தனது உள்ளங்காலை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எத்தனை நெருஞ்சி முட்கள் அவரது பாதங்களைச் சரண் அடைந்திருந்தனவோ!
அடியார்களாகிய நாங்கள் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தோம். என்னை மட்டும் அருகில் அழைத்தார்கள்.
எத்தனை முட்கள் பார்! என்று காட்டப் போகிறார்கள் என்ற நினைப்புடன் அருகில் சென்றேன்.என் உள்ளங்காலைப் பார். நிறைய சக்கிரங்கள் இருக்கின்றன. இங்கே இதோ பார் ஒரே புள்ளியில் மூன்று ரேகைகள் சந்திக்கின்றன. அதனால் வண்டிச் சக்கரம் போல் ஆறு ரேகைகள் தோன்றுகிறதில்லையா? இதற்கு ஷடரம் என்று பெயர். இந்த ரேகை இருப்பவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். (அதனால்தான் நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!)
“ராமநாதபுரம் ராஜா சொன்னார்: ”உங்கள் காலில் அபூர்வ ரேகைகள் இருக்கின்றன. நீங்கள் நடந்தபடியே போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதனால் ரேகைகள் அழிந்துவிடும். தாங்கள் இனிமேல் நடந்து செல்ல வேண்டாம். என் ஆட்களுடன் பல்லக்கு (மேனா) அனுப்புகிறேன்” என்றார்”
”என்னிடமிருந்த பக்தியினால் அப்படிச் சொன்னார். ஆனால் அதெல்லாம் காரிய சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டேன்!”பின்னர் கிரகண விமோசன ஸ்நானம் செய்துவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.இந்த நிகழ்ச்சியைப் பின்னர் என் தாயாரிடம் கூறினேன். அம்மாவுக்குப் பரம பரவசம்!
“வேறே யாருக்கும் கிடைக்காத அனுக்ரஹம் உனக்குக் கிடைச்சிருக்கு! கிரகண விமோசன புண்ய காலத்தில், தனது பாத தரிசனம் கொடுத்து உன்னை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா….” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார்.இந்த மாபெரும் பேறு, வேறு யாருக்காவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.பெரியவாளின் தனிப்பெரும் கருணைக்குப் பாத்திரமாகும் தகுதி எனக்கு இருந்ததா என்பதும் சந்தேகம் தான்!
அவ்யாஜ கருணாமூர்த்தி! வேறு, என்ன சொல்ல?











Sunday, February 14, 2016

. திருவொற்றியூர் - மூலவர் – ஆதிபுரீஸ்வரர் , புற்றிடங்கொண்டார் , படம்பக்கநாதர் ,

தொண்டைநாட்டு தேவார தலங்கள்
20. திருவொற்றியூர்


மூலவர் – ஆதிபுரீஸ்வரர் , புற்றிடங்கொண்டார் , படம்பக்கநாதர் , எழுத்தறியும் பெருமான் , தியாகேசர் , ஆனந்தத்தியாகர் , ஒற்றீஸ்வரர்
அம்பாள் – வடிவுடையம்மை ( திரிபுரசுந்தரி , வடிவுடை மாணிக்கம் )
தலமரம் – மகிழமரம் , அத்திமரம்
தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம் ( காசி தீர்த்தம் ) , நந்தி தீர்த்தம்
புராண பெயர் – திருவொற்றியூர்
ஊர் – திருவொற்றியூர்
மாவட்டம் – திருவள்ளூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர்

• தேவாரப்பாடல் பெற்ற தொண்டைநாட்டு தலங்களில் இத்தலம் 20 வது தலம்
• சுந்தரர் , சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்ட தலம்
• கலியநாயனார் பிறந்த தலம்
• ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம்
• தியாகராஜர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த தலம்
• ஐயடிகள் காடவர்கோன் , முசுகுந்த மன்னன் வழிபட்ட தலம்
• பட்டினத்தார் முக்திபெற்ற தலம்
• வள்ளலாருடன் நெருங்கிய தொடர்புடைய தலம்
• சக்திபீடங்களில் சிறப்பான இக்ஷீ சக்திபீடம்
• நந்திக்கு சிவனார் பத்மதாண்டவக்கோலக் திருக்காட்சி காட்டியருளிய தலம் 




















• மூலவர் ( ஆதிபுரீஸ்வரர் , ஒற்றீஸ்வரர் ) , அம்பாள் ( வடிவுடையம்மன் , வட்டப்பாறையம்மன் ) மற்றும் தலமரம் ( மகிழம் , அத்தி ) , தீர்த்தம் ( பிரம்ம மற்றும் அத்தி ) , ஆகம வழிபாடு ( காரணம் , காமீகம் ) என எல்லாம் இரண்டிரண்டாக அமைந்த தலம்
• கோயிலின் பக்கத்தில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக்குளம் அமைந்துள்ளது
• வெளிப்பிரகாரத்தில் சூரியன் , நால்வர் ( சுந்தரர் சங்கிலி நாச்சியாருடன் ) , சஹஸ்ரலிங்கம் , ஏகாம்பரநாதர் , ராமநாதர் , ஜகந்நாதர் , அமிர்தகண்டீஸ்வரர் , குழந்தை ஈஸ்வரர் , சுப்பிரமணியர் , 27 நட்சத்திர லிங்கங்கள் , ஆகாசலிங்கேஸ்வரர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன.
• நட்சத்திர லிங்கங்களுக்கு மகா சிவராத்திரியன்று விசேஷ அபிஷேக , ஆராதனைகள் சிறப்புடன் நடைபெறுகின்றன
• காளி மற்றும் கௌரீஸ்வரர் சந்நிதிகள்
• கௌரீஸ்வரர் சந்நிதியில் தட்சிணாமூர்த்தி
• ஆதிசங்கரர் வடிவம்
• வேப்பமரத்தினடியில் ஆவுடையார் இல்லாமல் சிவலிங்க பாணம் மட்டும் திருக்காட்சி
• ஆகாசலிங்கம் , அண்ணாமலையார் , ஜம்புகேஸ்வரர் , நாகலிங்கேஸ்வரர் , காளத்தீஸ்வரர் , மீனாட்சிசுந்தரேஸ்வரர் முதலானோரின் சந்நிதிகள்
• ஒற்றியூர் ஈஸ்வரர் சந்நிதி தூண்கள் அழகிய சிற்பவேலைப்பாடு கொண்டவை. இவருக்குதான் நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன
• பைரவர் தனிக்கோயிலில் நாய் வாகனமின்றி திருக்காட்சி
• நடராஜப்பெருமான் சந்நிதி பின்புறம் ஏகபாதமூர்த்தி திருக்காட்சி
• சுந்தரமூர்த்தியார் மண்டபத்தில் சுந்தரர் , சங்கிலி நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் காட்சி. இவர்களுக்கு பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெறுகின்றன
• தியாகராஜர் சந்நிதி மிக விசேஷமானது
• தலவிநாயகராக செல்வவிநாயகர் அருள்பாலிக்கிறார்
• உற்சவ வள்ளி-தெய்வயானையுடனான சுப்பிரமணியர் சந்நிதி
• குணாலய விநாயகர் சந்நிதி
• மூல கருவறை கஜபிருஷ்ட அமைப்புடையது
• படம்பக்கநாதர் சுயம்புவாக நாகப்புற்று வடிவ சிவலிங்க திருவடிவமாக திருக்காட்சி. பாணமும் , ஆவுடையாரும் சதுர வடிவில் திருக்காட்சி. எப்போது கவசம் சார்த்தப்பட்டே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் கவசம் அகற்றப்பட்டு புனுகு , ஜவ்வாது , சாம்பிராணித்தைலம் மட்டும் சார்த்தப்படுகிறது. இந்த நாள் முதல் மூன்று நாட்களுக்கு சுவாமி கவசம் இல்லாமல் பக்தர்களுக்கு திருக்காட்சி தருவார்.
• வாசுகி நாகத்தை சிவனார் தம்முடைய திருவடிவில் சேர்த்துக்கொண்ட தலம் இது
• படம்பக்கநாதர் சந்நிதி பிரகாரத்தில் கலியநாயனார் , 63வர் , தலவிநாயகர் சந்நிதிகள் உள்ளன.
• பீடத்தில் நான்கு சீடர்களுடன் உள்ள ஆதிசங்கரர் சந்நிதி
• ஏகாதசருத்ரலிங்கம் மற்றும் முருகர் சந்நிதிகள்
• வட்டப்பாறையம்மன் சந்நிதி மிகுந்த முக்கித்துவம் வாய்ந்தது
• திருப்தீஸ்வரர் சந்நிதி
• சந்திரசேகரர் சந்நிதி
• கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி , மகாவிஷ்ணு , பிரம்மன் , துர்க்கை முதலானோர் திருக்காட்சி
• துர்க்கையம்மன் காலடியில் மகிஷாசுரன் இல்லை
• நுழைவு வாயில் வலப்புறம் தனிச்சன்னதியில் அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி திருக்காட்சி. இத்தலத்தில் இவ்வம்மையே மிகுந்த வரப்பிரசாதியாக திகழ்கிறார். தினமும் காலை 09:00 மணிக்கும் , மாலை 06:00 மணிக்கும் அம்மைக்கு புஷ்பாஞ்சலி சேவை ( பூக்களால் அலங்கரித்தல் ) நடைபெறுகிறது
• இத்தல வடிவுடையம்மன் ஞானசக்தியாகவும் , இங்கிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள மேலூர் ( மீஞ்சூர் ) திருவுடைநாயகியம்மன் இச்சாசக்தியாகவும் , 25 கிமீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயில் கொடியிடைநாயகியம்மன் கிரியாசக்தியாகவும் திகழ்வதாகவும் , இவர்கள் மூவரையும் பௌர்ணமியன்று ஒரே நாளில் காலையில் திருவொற்றியூர் வடிவுடையம்மனையும் , நண்பகலில் மீஞ்சூர் திருவுடையம்மனையும் , மாலையில் திருமுல்லைவாயில் கொடியிடையம்மனையும் தரிசிப்பது சிறப்பானதாக சொல்லப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் இந்த மூன்று ஆலயங்களும் நாள்முழுவதும் திறந்திருக்கும்.


• நந்தி உயரமான பீடத்தில்

• முக்திபுரம் , ஆதிபுரி , பூங்கோயில் , பூலோகச் சிவலோகம்

என்றெல்லாம் அழைக்கப்படும் தலம்

• மாசிமாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது

• வைகாசியில் தியாகராஜர் வசந்த உத்சவம் 15 நாட்கள் நடைபெறுகின்றது

• கார்த்திகை 3-ம் திங்கட்கிழமைகளில் தியாகராஜருக்கு சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெறுகின்றது

• நடராஜர் அபிஷேகங்கள் , ஐப்பசி அன்னாபிஷேகம் , நவராத்திரி , மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மாசிமகம் , சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம் , கந்தசஷ்டி , மார்கழி திருவாதிரை , தைப்பூசம் முதலான உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

• சுந்தரர் , பரவைநாச்சியார் திருமணம் மாசிமகத்தன்று விசேஷமாக மகிழமரத்தினடியில் நடைபெறுகின்றது. இதற்கு மகிழடி சேவை என்று பெயர் சொல்லப்படுகிறது. 63வரும் இவ்வுற்சவத்தில் பங்குகொள்வது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

• மகிழமரத்தினடியில் சிவனாரின் திருப்பாதம் உள்ளது
• ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று கலிய நாயனார் குருபூஜை விமரிசையாக நடைபெறுகிறது

• ஆடி பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திராட நட்சத்திரத்தன்று பட்டினத்தார் குருபூஜை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது

• கோயில் அருகேயுள்ள எண்ணூர் நெடுஞ்சாலையில் , சாலை ஓரத்தில் பட்டினத்தார் கோயில் அமைந்துள்ளது.

 பட்டினத்தார் முக்திபெற்ற இடம் இது. கடற்கரையை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிறிய கோயில் இது.
கோயிலின் உள்ளே சிவலிங்க திருவடிவமும் , நந்தியும் உள்ளன. விநாயகர் , சுப்பிரமணியர் , நடராஜர் முதலான உற்சவத்திருமேனிகளும் உள்ளன.

ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் பட்டினத்தார் குருபூஜை நடைபெறுகின்றது.

• திருமண மற்றும் புத்திர தோஷங்கள் நீங்க வழிபடவேண்டிய தலம்
தரிசன நேரம்
காலை 06:00 am – 12:00 pm &
மாலை 04:00 pm – 08:30 pm
தொடர்புக்கு
044-25733703 ,
94444-79057












சென்னையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சென்னையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் விளங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் செல்லும் சாலையில் காலடிப்பேட்டையை அடுத்து வரும் தேரடி நிறுத்தத்தில் இறங்கி , எதிர்ப்புற வீதியின் கோடியில் அமைந்துள்ள கோயிலை அடையலாம்.