Tuesday, January 27, 2015

Mahaperiyava mahimaigal

எமதர்மனுக்கே டாட்டா!

தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடராஜனின் மகளின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இந்நிலையில்
மாப்பிள்ளையின் சித்தப்பாவிற்கு ஹார்ட் அட்டாக். .சி.யூவில் இருந்தார். இப்போதும் ஏதும் சொல்ல
முடியாது என்றார்கள் டாக்டர்கள்.

பெண்ணைப் பெற்றவர்களுக்கு மனக் கலக்கம்.எவரும் அபசகுனம் என்று ஏதும் கூறாமல் இருக்க வேண்டும். திருமணம் தடையில்லாமல் நடைபெற வேண்டுமே என்ற எண்ணமே பிரார்த்தனைபகவானைத் தஞ்சமடைவதைத் தவிர,இந்நிலையில் வேறு உபாயம் இல்லை என்று உணர்ந்தனர் அத்தம்பதி.

காஞ்சிபுரம் மஹாப் பெரியவாளை தண்டனிட்டு வணங்கினார்கள். தங்களின் மனக்கலக்கத்தை
தெய்வத்திடம் தெரிவித்தனர்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
"
பெண்ணின் திருமணம் குறித்து கவலைப்பட வேண்டாம் குறித்த முகூர்த்தத்தில் அமோகமாக நடைந்தேறும்"
இது ஸ்வாமிகளின் அருள்வாக்கு. எவராலும் கொடுக்க முடியாத தைரியத்தைத் தந்தது இத்தெய்வத்தின் வாக்கு.

எமதர்மனுக்கே டாட்டா காண்பித்து விட்டு எழுந்து வந்து விட்டார் சித்தப்பா. மணமக்களை ஆசிர்வதித்து
அட்சதைப் போட்டார்.

"
தெய்வத்தின் வாக்கு பொய்க்குமோ?

courtesy : website





ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் -- தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்
ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதைப் பெரிது படுத்தாதே. சிறிது குண விசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும் என்பது பெரியோர் உபதேசம். நானே உங்கள் தவற்றை இப்போது அம்பலப்படுத்துகிறேன். பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்துபோன சந்திர கலைக்கும்கூடக் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார். அதே ஈஸ்வரன் மகா கொடிய ஆலகால விஷயத்தை யார் கண்ணிலும் தெரியாமல் தம் கண்டத்தில் ஒளிந்து வைத்திருக்கிறார். இவ்வாறு தண்டி என்ற கவி கூறுகிறார்.
ஆனால் தோஷம் பார்க்கிலும், அதைப் பெரிதுபடுத்திப் பேசுவதும் எழுதுவதும் பொதுவில் தற்காலத்தில் மிக அதிகமாகியிருக்கிறது. அதிலும் நிறையப் படித்தவர்கள் நிறையக் குற்றம் காண்பார்கள். குற்றம் கண்டுபிடிப்பதுதான் அறிவாளியின் காரியம். வித்வான் என்றாலே தோஷக்ஞன் என்று லட்சணம் சொல்லியிருக்கிறது. என்று இவர்கள் வாதம் செய்யலாம். தோஷக்ஞன் என்றால் குற்றம் அறிந்தவன் என்றே அர்த்தம். குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்பவன் என்றல்ல. குற்றம் குறைகளை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் உள்ளவர்களுக்கும் இதை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஒயாமல் தேஷம் பாராட்டிக் கொண்டும் அதைப் பிரச்சாரம் பண்ணிக் கொண்டும் இருக்கக்கூடாது.
தோஷமுள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நமக்குப் பூரண யோக்கியதை இருக்கவேண்டும். நம்மிடமே ஏறாளமான தோஷங்களை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால், அது பிரயோஜனப்படாது. சில சமயங்களில் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்னைவிட வீம்பாகத் தங்கள் தவற்றை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். நமக்கு யோக்கியதை இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும் என்று நிச்சயமானாலே பிறருக்கு உபதேசிக்கலாம்.
ஒருவரது நல்ல அம்சத்தைக் கொண்டாடுவதால் அவருக்கு மேலும் உற்சாகம் உண்டாகிறது. இந்தக் குணங்களை விருத்தி செய்து கொள்கிறார். ஆனாலும் ஒருவரைப் புகழுவதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேடியாக ஸ்தோத்திரம் செய்து, ஒருவரை அகங்காரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால்தான் பெரியோர்கள், ஈஸ்வரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம். பத்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும். (சவாரி முடிந்த பின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல்) வேலையை முடிந்த பின்னரே உழியரைப் பாராட்டலாம். பிள்ளையை ஒரு போதும் புகழக்கூடாது என்கிறார்கள்.
ப்ரத்யக்ஷே குரவ: ஸதுத்யா:
பரோக்ஷே மித்ர பாந்தவா: I
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச
ந ஸ்வபுத்ரா: கதாசன II
இப்போது நான் உங்கள் மேல் குற்றப் பத்திரிகை படித்ததற்கும் சமாதானம் சொன்ன மாதிரி ஆகிவிட்டது. தன் சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொன்னதால், நான் உங்களைத் தோஷம் சொன்னதிலும் தோஷமில்லைதான்.


தெய்வத்தின் குரல்

தெய்வவாக்கு 
எங்கும் நிறைந்த பரம்பொருள், மாயா சக்தியினால் ஈஸ்வரன் மூலமாக உலகைப் படைத்தது. அப்படிப் படைக்கப்பட்ட போது எல்லாப் பிராணி வர்க்கத்திலும் ஆண் பெண் என இரு வர்க்கம் பிரிக்கப்பட்டது. இந்தப் பூமி, பூமாதேவி என்றும் பாரத மாதாவென்றும், பெண் வர்க்கமாகவே அழைக்கப்பட்டு வருகிறது. பூமிதேவியானவள் பொறுமைக்கு இருப்பிடமானவள். எல்லாவிதப் பயிர்களும் உண்டாவதற்கு ஆதாரமானவள். பூமாதேவி இல்லையென்றால் உலகமே இல்லை.
மனித வர்க்கத்தில் ஆண் பெண் இரண்டு வகை. பூமி தேவி போல் வாழ்க்கையில ஏற்படக் கூடிய எல்லாவித சுக துக்கங்களுக்கும் ஆதாரமாக உள்ளது பெண் இனம். வாழ்க்கை என்பது ஆண் பெண் இருவரையும் பொதுவாகக் கொண்டாலும் பெண்ணின் மூலமாகத்தான் வாழ்க்கை ஒளி வீசுகிறது. நல்ல ஒரு பெண்ணைப் பார்த்தால் 'கிரஹலக்ஷ்மி வந்திருக்கிறாள்' என்று சொல்வார்கள்.
ஒரு பூமியில் நெல் விதைக்க வேண்டுமானால், நெல் நன்றாக இருக்கவேண்டும் என்பது பொது விதி. இருந்த போதிலும் விதை நெல்லை பத்திரமாக வைத்திருப்பார்கள். மற்றபடி விதை நெல்லை ஒன்றும் செய்ய மாட்டார்கள். பூமியைத் தண்ணீர்விட்டு நன்றாக உழுது பண்படுத்திப் பிறகு நெல்லைப் போடுவார்கள். அப்படி நெல் போட்ட பிறகும் நெல் நன்றாக விளைவதற்கு பூமிக்குத்தான் உரமிடுவார்கள். நெல் வளர்ச்சிக்கு இடையூறாக முளைக்கக் கூடிய களைகளை பூமியில் இருந்து எடுத்து வெளியே எறிவார்கள். நெல் வளர்வதற்கு பூமிக்குத்தான் அதிக காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நெல்லுக்கல்ல.
அது போல ஒரு சமுதாயம் வளரவேண்டுமானால், நெல் போன்ற ஆண்களைக் காட்டிலும் பூமி போன்ற பெண்களுக்குத்தான் அதிக காரியங்கள் செய்யவேண்டியிருக்கின்றன. நெல் நிறைய மகசூலாகி லாபம் வந்தாலும் அல்லது குறைந்து போய் நஷ்டம் வந்தாலும் இந்த இரண்டினாலும் அடையக் கூடிய பலன் மனிதனுக்கே தவிர, பூமிக்கல்ல. அது போல இந்த மனித சமுதாயத்தில் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சுகதுக்கங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு பெண் இனம் வாழ்ந்தாலும் அதனால் வரக்கூடிய கௌரவம் குடும்பத் தலைவனுக்கு ஏற்படுகிறது.

உதாரணமாக ராணுவத்தில் பணி புரிபவர்கள் எல்லோரும் நன்றாகப் பணிபுரிந்தால் அதன் புகழ் அந்தப் படைத் தலைவனுக்குப் போய்ச் சேருகிறது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தனியாகவும் வெகுமதி வழங்குகிறோம். அது போலத்தான் இராணுவம் போன்று பொறுப்புகளைத் தாங்கும் பெண் இனங்கள் சொந்தப் பணிகளையும் வீட்டுப் பணிகளையும் நன்றாகச் செய்தால் அதன் பெருமை - புகழ் எல்லாம் கணவனைச் சேரும். பெண்களையும் புகழ்வார்கள்.

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்
குரு என்று நாம் தேடிப் போகிறவர் வாஸ்தவத்தில் ஒரு போலியாக இருந்துவிட்டால் என்ன பண்ணுவது? அவர் சுத்தரா இல்லையா என்று நமக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? சுத்தர் என்றே போகிறோம், அப்புறம் வேறு தினுஸாகத் தோன்றுகிறது என்றால் என்ன பண்ணுவது? இன்னோரிடத்துக்குப் போகலாம் என்றால், அங்கேயும் இதே மாதிரி ஏமாந்து போகமாட்டோம் என்று என்ன நிச்சயம்? இப்படி குழப்பமாயிருக்கிறது. லோகம் பொல்லாதது. நாலு தினுஸாகப் பேசும். ஒரு சுத்தரைப் பற்றியே அபவாதமாக சொல்லிவிடுகிறது. அது நிஜமாக இருந்துவிட்டால் நம் கதி என்ன ஆவது என்று அவரை ஆச்ரயித்தவர்களுக்கு பயம் உண்டாகிறது.
இதற்கு என்ன பண்ணலாம்? வித்யாப்யாஸ குரு விஷயத்தில் இது பெரிய பிரச்சனை இல்லை. அவரிடம் மநுஷ்யர்களுக்குள் நல்ல சிஷ்டர்களால் முடியக்கூடிய ஒழுக்கங்களைத் தான் எதிர்ப்பார்க்கிறோம். இதை அநேகமாக அவர் பூர்த்தி பண்ணிவிடுவார். அவர் கிருஹஸ்தாச்ரமிதான் என்பதாலேயே ஸந்நியாஸ குருவுக்கு ரொம்பவும் களங்கமாகிற தப்புக்கள் இவருக்கு ஏற்படுவதற்கே இடமில்லாமல் போகிறது. அதுவும் தவிர இவரிடம் சிஷ்யனாக இருப்பது பால்யத்தில்தான். அப்போது மனஸ் தோண்டித் தோண்டி எதையும் ‘ஜட்ஜ்’ பண்ணாது. அதனால் இவரையும் ஜட்ஜ் பண்ணாது. இவர்தான் தெய்வம் மாதிரி என்று ரொம்பவும் இளமனஸில் ஏற்றிவிட்டதால், அது அப்படியே நினைத்துக் கொண்டு பக்தியோடு இருந்துவிடும்

.

குரு உபதேசம்

குரு உபதேசம்:
அடக்கம்:
அடக்க குணம் வருகிறது ரொம்பவும் கஷ்டம். அதுவும் கல்வி கற்க கற்க "தான் அறிவாளி" என்ற அஹங்காரமும் ஏறிக் கொண்டேதான் வரும். அடக்கம் வேண்டும் என்பதற்காகவேதான் "குருகுலவாசம்" என்று வைத்து, வீட்டை விட்டுப் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள்.
குரு நல்லவராக இருந்தால் அவரிடம் பக்தியாய் இருப்பதில் நமக்கு என்ன பெருமை? யோக்கியதை இல்லாத ஒருவர் குருவாக இருந்தாலும் அவரிடம் அடங்கி இருந்தாலே மனது நல்ல பக்குவம் அடையும்.

நல்ல எண்ணம், சீர்திருத்தம் எதுவானாலும் அடக்கம் வேண்டும். அப்படி இருந்து கொண்டு செய்தால் சாஸ்திர விரோதமாகப் போக வேண்டியே வராது. நாம் நினை என்றால் மனம் ஒன்றை நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்கு சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.
மனசாட்சிக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன் என்று சொல்வது தப்பு. மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் அவனது சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்கவேண்டும்.

அதற்கு நாம் ஆரம்பிக்க வேண்டியது அம்பாளுடைய சரணாரவிந்த த்யானம் தான்.