Tuesday, January 27, 2015

"காரணகாரியம்"
தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இரண்டு நண்பர்கள் ஒருவர் பெயர் குரு.
மற்றொருவார் பெயர் சிவா. குரு ஸ்வாமிகளிடம்
தீவிர பக்தியும்,விசுவாசமும் கொண்டிருந்தார்.
மற்றவருக்கு அப்படியில்லை.
ஒரு நாள் பெரியவாளை தரிசிப்பதற்கு தன்னுடன்
வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி
சிவாவை அழைத்து வந்திருந்தார் குரு.
அன்றைய தினம் ஸ்வாமிகள் மௌன விரதம்
மேற்கொண்டிருந்தார்கள். அன்பர்களுக்கு
தரிசனம் அளித்து பிரஸாதமும் அளித்துக்
கொண்டிருந்தார்கள்.
ஸ்வாமிகளின் விரதத்தை அறிந்த பக்தர்களும்
மௌனமாக பிரஸாதம் பெற்றுச் சென்றார்கள்.
குருவும்,சிவாவும் ஸ்வாமிகளை தரிசித்துக்
கொண்டு வணங்கினார்கள்.
ஸ்வாமிகளின் முன்பு தட்டுகளில் பலவகையான
பழங்களும் இருந்தன.தட்டிலிருந்த திராட்சை
கொத்தை எடுத்து குருவுக்குத் தந்தார்கள். இரண்டே
இரண்டு திராட்சையை மட்டும் சிவாவிடம்
அளித்தார்கள். அவர்களும் சென்றுவிட்டனர்.
எல்லோரையும் ஒன்று போலவே பாவிக்கும்
பெரியவாளா இப்படி என்று சிஷ்யர்கள் திகைத்து
நின்றார்கள்.
பெரியவா எது ஒன்றையும் காரணம் இல்லாமல்
செய்யமாட்டார்களே. இச்செயலும் காரணத்துடனே
நடந்தேறியது.
குருவின் குடும்பம் கூட்டுக் குடும்பம். மொத்தம்
இருபத்தி ஏழு பேர். ஸ்வாமிகள் கொடுத்த
திராட்சைக் கொத்திலும் இருபத்தி ஏழு பழங்கள்.
சிவாவின் வீட்டில், அவரும் அவருடைய மனைவியும்
மட்டும். அதனால் இரண்டு பழங்கள் மட்டுமே.

No comments: