Tuesday, March 31, 2015

ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் -- மஹபெரியவா










ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்"

ரா.கணபதி நேரில் கேட்ட அற்புத நிகழ்வு.

ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றிப் பல கூறியதிலிருந்து: “நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம். அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது” என்றார்.



மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமன்றி கந்தனின் பிதா நரஸிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்து வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார்.



“அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணவைதிகம்” என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர்.



“அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு சிரிச்சுக்கிண்டு சாந்தமாகவே இருந்துடுவார்.



“நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுக்கொண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்குக் கொஞ்சங்கூட அந்த ட்ரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி 2 ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது.



“பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends. இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்அ தினுஸு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்ம வெறும் நாள்லயே ஏறக்கொறய தெவச மடி பார்க்கரவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்றேளே, அந்த மாதிரி(2. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயஸானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.”



பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!”



அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது.



காந்தன் அத்யயனம் ஆரம்பித்துச் சிரித்து காலத்திலேயே அவருடைய பிதா பித்ருலோகம் ஏகிவிட்டார்














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Thanks to Kanchi Kamakoti peetam  and our namaskaram to Kanchi periyavas

Kanchi Acharyas


                      Kanchi Acharyas  








AT Kanchi mutt



Periyava at  Adyar  - Sri Padmanaba swamy temple

Periyava at  Adyar  - Sri Padmanaba swamy temple  


Thanks to Kanchi Kamakoti madam and our  namaskaram to  periyavas for the wonderful photos 


"இதுவும் பூஜைதான்!" மஹபெரியவா





"இதுவும் பூஜைதான்!" 

தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார்.
வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த அதிவினய பக்தியுடன் கைகூப்பி நின்றார்கள்.காணிக்கையுங்கூட ஸமர்ப்பித்தார்கள்.

தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக, அவர்களது நலன்களை, நலன்கள் இல்லாமையும் கேட்டுக் கொண்டார்-ஓடாமல்,பறக்காமல் நின்று நிதானமாக!

இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர  மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும்-துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து 
முடிவு செய்தார்.

இதிலேயே ஓரளவு நேரம் சென்றதில் அடுத்த முகாம் அடையத் தாமதமாகுமே என்று மானேஜரும் மற்ற பரிவாரத்தினரும் எண்ணினர்.

ஆனால் ஏழையர் தெய்வமோ நிம்மதியாக உட்கார்ந்து விட்டது. சிப்பந்திகளை அனுப்பி அவ்வளவு நந்தன்-
நந்தினிகளுக்கும் வேட்டி புடவை வாங்கி வரச் சொல்லி விட்டது. அந்தச் சிற்றூரில் அவ்வளவு ஜவுளி ஸ்டாக் இல்லை என்று தெரிந்த பின்னும் விடாமல் அருகிலுள்ள சற்றுப் பெரிய ஊரான குடவாசலுக்கே போய் வாங்கிவர ஆணை பிறப்பித்தது.

அந்த நடுவழி மர நிழலிலேயே அவர்களுக்கு 'திண்டி'யாக ஒரு ஸாம்பார் சாதமும் தயாரிக்க உத்தரவிட்டுவிட்டது. இதெல்லாம் முடித்துப் புறப்பட இரண்டு மூன்று மணி அவகாசம் பிடிக்குமே, வெயிலும் நன்றாக ஏறி விடுமே,அதற்கப்புறம் அடுத்த முகாம் போய் பெரியவாளுக்கே உரிய அந்தப் பல மணி நேர பூஜை செய்வதென்றால் மிகவும் ஆயாஸமாகிவிடுமே! இதை எண்ணி மானேஜர் கவலைப்பட்டார்.

"இப்பவே டயம் ஆயிடுத்து. இன்னும் உத்திரவானதை யெல்லாம் பண்ணிட்டுப் போய் அப்புறம் பூஜை....." என்று அவர் சொல்லிவரும் போதே......

ஸ்ரீசரணர் (பெரியவா) குறிக்கிட்டு,  "இதுவும் பூஜைதான்!" என்றார்.














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து - மஹா பெரியவா

                                    



ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
பச்சைப் பட்டு பாவாடை
சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.
ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்கா

கவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.
வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, "ஊஹூம்!, முடியாது... இப்பவே!"ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.
குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!"னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.
பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.
அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.
செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.
எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.
பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.
அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.
இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.
ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.
வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.
இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.
மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். "அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?" என்று கேட்டார்.
திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.
"நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.
தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா...! அதனால கவலையேபடாதேம்மா...!"
அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !















              

Thanks to  Periva Forum

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Sunday, March 8, 2015

மூலவர்
:
சவுந்தரேஸ்வரர்
உற்சவர்
:
-
அம்மன்/தாயார்
:
-
தல விருட்சம்
:
வன்னி, கொன்றை, வில்வம்
தீர்த்தம்
:
-
ஆகமம்/பூஜை
:
-
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்
:
-
ஊர்
:
சைதாப்பேட்டை
மாவட்டம்
:
மாநிலம்
:
தமிழ்நாடு     
     

பாடியவர்கள்:
 திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்




 தல சிறப்பு: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.



திறக்கும் நேரம்:




காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:



அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.

 பொது தகவல்:




இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.