இந்துத் துறவி
ராம கோபாலன் அவர்கள்.
காஞ்சிப் பெரியவரைப் பற்றி எனக்கு நன்றாகவே
தெரியும். அவராக விரும்பினால் மட்டுமே பேசுவார்.
எனக்கு வியப்புத் தருகிற அம்சம் என்னவென்றால்
நான் காஞ்சி மடத்துக்குச் சென்ற ஒவ்வொரு முறையும்
மௌனம் காக்காமல் என்னிடம் ஆத்மார்த்தமாகப்
பேசியிருக்கிறார். அந்த பாக்யம் என் பேறு!!

அவரை சந்திக்க எத்தனையோ அரசியல்வாதிகள்
வந்திருந்தபோதிலும் ஒரு முறை கூட அவர் எந்தக்
கட்சியுடனும் அரசியலுடனும் அவர் சம்பந்தப் படுத்திக்
கொண்டதில்லை. ஆனால் உலகளவில் ஆதிக்க அரசியல்
எப்படி இருந்தது என்பது பற்றித் தெரிந்தும் அவர் அரசியலில்
இருந்து வெகு தூரத்தில் விலகியிருந்தார்.

நான் தலியில் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில்
ஆஸ்பத்ரியில் இருந்தபோது எனக்குப் ப்ரசாதம்
அனுப்பியிருந்தார். அதனை என் வாழ் நாள் முழுதும்
மறக்க இயலாது.

ஆஸ்பத்ரியில் டிஸ்சார்ஜ் ஆகி காஞ்சி மடத்துக்குப்
போனபோது பாலப் பெரியவாளுக்கு யாக சாலையில்
வைத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னை
உட்காரச் சொன்னார். பாடம் முடிந்தவுடன் என் உடல்
நிலை பற்றி விஜாரித்தார்.என்னைச் சுற்றி மூன்று
சக்கரங்கள் போட்டார்.எனக்கு அதன் அர்த்தம்
விளங்கவில்லை. ஜயேந்த்ர பெரியவாளும், பாலப்
பெரியவாளும் என்னிடம் ''இதுபோல் யாரிடமும்
அக்கறை எடுத்துக் கொண்டதில்லை'' என்றார்கள்.

ஏதோ உயர்ந்த நோக்கத்தில்தான் அவ்வாறு
சக்ரம் போட்டிருப்பார்கள் எனத் தோன்றியது.
பற்றற்ற நிலைக்கு அவர் ஓர் உதாரணம்.அவர்
சித்தியாவதற்கு முன் காஞ்சி சென்றிருந்தேன் .
ஜயேந்த்ர பெரியவாளிடம் கங்கைக் கரையில்
ஸஹஸ்ர காயத்ரி செய்யும் ஒருவரைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்''நீதான்
ஒரு கோடி காயத்ரி ஜபத்தை முடிச்சிருக்கியே''
என்றார். நான் ''இல்லை, கொஞ்சம் குறைச்சலாகத்தான்
செய்திருப்பேன்''என பதில் சொன்னேன். ''எந்த வருஷம்
முதல் செய்யிகிறாய்'' என்று என்னைத் திரும்பக் கேட்டார்.
''1935லிருந்து ''என்று பதில் சொன்னேன்.அதான் முடிச்சிட்டயே''
என்று சொன்னார் ஜயேந்த்ரர்.

பிறகு பெரியவாளை அவர் சித்தியாவதற்கு முன்
பார்க்கச் சென்றேன்.ஒரே கூட்டம். தடுப்புக்காக
மர பென்ச் ஒன்றைப் போட்டிருந்தார்கள்.அதைத்
தாண்டி வரச் சொன்னார் பெரியவர். அருகில் போனேன்.
தொண்டர் ஒருவர் ''இவருக்கு உடம்பு சரியில்லை,
அதனால் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கார்'' என்று
சொன்னார். என்னை நிமிர்ந்து பார்த்தார் பெரியவர்
''நான் என் உடம்பைப் பற்றிக் கவலைப் படவில்லை,
அங்கங்கே மத மாற்றங்கள் நடக்கிறது, இது
பூதாகாரமாகாமல் தடுக்க அனுகரஹம் பண்ண வேண்டும்''
என சொன்னேன். சிறிது நேரம் கண்ணை மூடியிருந்தார்
ஆமாம் என்பது போல். பிறகு ஆசிர்வதித்து அனுப்பினார்,
அதுதான் கடைசி சந்திப்பு.
ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன்,
அவருடைய மறைவு என் மனடில் எவ்வித வெற்றிடத்தையும்
ஏற்படுத்தவில்லை.மாறாக அவர் இப்போதும் என்னுடன்
இருப்பதாகவே உணர்கிறேன்.
இதனைப் பகிர்ந்தவர் இந்துத் துறவி எனக் கருதப்படும்
ராம கோபாலன் அவர்கள். ஹிந்து முன்னேற்றக் கழகம்.

ஜய ஜய சங்கரா.
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.