"மாண்டவர் மீண்டால்?"
சொன்னவர்-சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீபரமேசுவரன் ஆதிசங்கரராக அவதாரம் செய்து,
வேதம்,வேதாந்தம்,வைதீகதர்மம் முதலியவற்றை
அக்காலத்தில் ரட்சித்ததை சங்கர சரித்திரங்கள்
கூறுகின்றன.
ஆனால் நமது காஞ்சி பீடாதிபதிகள் ஸ்ரீசந்திர
சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில்
பார்த்தவர்கள், ஆதிசங்கரரின் சரித்திரத்தை
நன்கு படித்தவர்களாக இருந்தால், அந்த ஆதிசங்கரரே
இவர் என்று நிச்சயித்துவிடுவார்கள்.
தீட்சிதர் கூறும் ஓர் அனுபவம் கீழே;
"சில வருடங்களுக்கு முன் சுக்ர வாரத்தன்று பக்தர்கள்
பூஜை செய்துவிட்டு எழுந்து நின்றார்கள்.ஆயிரக்
கணக்கான சுமங்கலிகள் அங்கே கூடி இருந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஒரு ஸ்திரீ நெற்றியில் குங்குமம்
இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.
அந்த அம்மாளை ஸ்ரீஆச்சாரியாள், சந்நிதிக்கு வரும்படி
ஜாடை காட்டி அழைத்தார்கள். ஆனால் அந்த அம்மாள்
வராமல், கண்ணீர் உகுத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் அழைத்து அவளை நமஸ்காரம் செய்து கொள்ள
அனுமதித்தார் சுவாமிகள்.
"ஏன் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவில்லை?"
என்று கேட்டார்கள்.
தன் கணவன் யுத்தத்தில் இறந்துவிட்டதாகப் பேப்பரில்
மூன்று முறை செய்திகள் வந்து ஆறுமாதங்கள்
ஆகிவிட்டதாகவும், இனி கர்மாக்களை எப்படிச்
செய்யவேண்டும் என்பதைச் சுவாமிகளிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளவே, தரிசனத்துக்கு வந்திருப்பதாகவும்
கதறிக் கூறினாள் அந்தப் பெண்மணி.
உடனே ஆச்சாரியாள் கை நிறையக் குங்குமத்தை அள்ளி
எடுத்து அந்த அம்மாள் கையில் கொடுத்து
"வருத்தப்படாதே! உன் கணவன் உயிருடன்தான் இருக்கிறான்.
கூடிய சீக்கிரம் வந்து சேருவான்!" எனக் கூறினார்.
அதுபோலவே அடுத்தவாரமே அந்த அம்மாளின் கணவன்
வந்து சேர்ந்துவிட்டான்.!
அவர்கள் குடும்பத்துடன் வந்து ஆச்சாரியாளைத் தரிசித்து
நமஸ்கரித்துவிட்டுப் போனார்கள். அப்போது அந்தக்
குடும்பம் அடைந்த ஆனந்தத்தை எப்படி விவரிப்பது.?"
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment