Wednesday, May 6, 2015

வித்தை காட்டி பிழைச்சுக்கோ!

                 வித்தை காட்டி பிழைச்சுக்கோ!














"வித்தைக்காரன் குரங்கை ஆட்டுறதைப் போல என்னை படுத்துறியே?' என்று பிறரால் மனம் புண்படும்போது வருத்தத்தில் சொல்வார்கள்.

ஆனால், அருளாளர் ஒருவர் இறைவனிடம், "குரங்காட்டி போல என்னை வைச்சுப் பிழைப்பு நடத்திக்கோ!' என்று மனம் உவந்து சொல்கிறார். அவர் வேறு யாருமல்ல! காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் தான்.

""பரமேஸ்வரா! வெறுமனே கையில் கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறாயே! என் குரங்கு மனசை பக்தி என்னும் கயிற்றால் கட்டி உன் கையில் பிடித்துக் கொள். நான் உன்னை தொடர்ந்து வருகிறேன். குரங்காட்டி போல என்னை வைத்து வித்தை காட்டி பிழைத்துக் கொள். இதனால், உனக்கும் பிழைப்பு நடக்கும். நானும் பிழைத்துக் கொள்வேன்!'' என்று வேடிக்கையாக வேண்டுகிறார். 

குரங்கு இங்குமங்கும் தாவுவது போல, மனமும் எப்போதும் ஆசைவயப்பட்டு தாவியபடி இருக்கும். ஆனால், வித்தைக்காரனான குரங்காட்டியிடம் குரங்கு கட்டளைக்கு கீழ்ப்படிவது போல, மனம் இறைவனின் வசமாகி விட்டால், அவரையன்றி வேறு எதையும் சிந்திக்காது என்பதைச் சங்கரர் இவ்வாறு உணர்த்துகிறார்.










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: