ஆரம்பித்தார்கள். பெரியவா முன்னால் சரண
கோஷம் செய்து
சாமியே சரணம் ஐயப்பா....
சபரிமலை பக்தர்கள் இரண்டு பேருந்துகளில் வந்தார்கள். அவர்களிடம் ''எந்தெந்த ஊர்களுக்குப் போனீர்கள், இன்னும் எந்தெந்தெ ஸ்தலங்களுக்குப் போகப் போகிறீர்கள் ''என்று பெரியவா கேட்டார்.
தாங்கள் சென்ற ஊர்களைச் சொல்லிவிட்டு,கேரளாவில்
வைக்கம்,குருவாயூர், சோற்றாணிக்கரை ஆகிய
க்ஷேத்ரங்களுக்கும் போகப்போவதாக சொன்னார்கள்.
போகிற வழியில் , திருச்சி மாத்ருபூதேஸ்வரர் ,
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ,ஸ்ரீரங்கம்
ரங்கனாதர், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம்
முருகன், நெல்லையப்பர். குற்றாலம் குற்றால
நாதர் ஆகிய எல்லாக் கோவில்களுக்கும்
செல்லுமாறு பணித்தார்கள்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ,ஸ்ரீரங்கம்
ரங்கனாதர், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம்
முருகன், நெல்லையப்பர். குற்றாலம் குற்றால
நாதர் ஆகிய எல்லாக் கோவில்களுக்கும்
செல்லுமாறு பணித்தார்கள்.
ஆனால் அன்பர்கள் எல்லாருக்கும் இப்படிப்
போவதற்கு சாத்தியப் படவில்லை.
ஒரு பேருந்து அவர் சொன்ன வழியில் சென்றது.
மற்றது அவர்கள் ஏற்கெனவே தீட்டியிருந்த
திட்டப்படி சென்றது.
பத்து தினங்கள் கழிந்து செய்தி வந்தது;
பெரியவா சொன்ன வழியில் சென்ற பஸ்
எந்தவித பாதிப்பும் இல்லாமல் சௌகர்யமாக
திரும்பி வந்தது. மற்ற பஸ் நடுவில் விபத்தில்
சிக்கி சிலர் படு காயமடைந்தும் மற்ற சிலர்
சிவலோக ப்ராப்தி அடைந்ததாகவும் தெரிந்தது.
சபரிமலைக்கும் போகாமல் பயணம்
முடிந்தது
உயிர் தப்பிய கோஷ்டி வருடம் தோறும் சபரிமலை
சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர ஆரம்பித்தார்கள்.
பெரியவா முன்னால் சரண கோஷம் செய்து
வந்தனம் செய்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.
நீண்ட் சரண கோஷம் முடியும் வரை த்யான பரராக
பெரியவா கண்மூடி ஆத்மானந்தத்தில் மூழ்குவார்கள்.
ஜய ஜய சங்கரா....
நன்றி..கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்.
Courtesy : Facebook : Saraswathi Thyagarajan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment