"இதை அணிந்து கொண்டால், பிறகு பொய்
பேசப்படாது.செய்வியா?"
தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்வாமிகளின் பக்தர் ஒருவர் நேபாள் சென்று
திரும்பினார். அப்போது அணிந்து கொள்வதற்காக
ருத்திராட்ச மாலை ஒன்றை வாங்கி வந்திருந்தார்.
மாலையை பெரியவாளின் ஆசி பெற்ற பின்பு
அணிய வேண்டும் என்ற விருப்பம் அந்த பக்தருக்கு.
பெரியவாளை தரிசிக்க வந்த சமயம் ருத்ராட்ச
மாலையை ஸ்வாமிகளின் முன்பாக வைத்துவிட்டு
வணங்கினார்.
"இது யாருக்கு?" என்றார்கள் ஸ்வாமிகள்.
"நேக்கு தான், பெரியவா ஆசி செய்து கொடுத்தால்
அணிந்து கொள்ளலாம் என்று தான்-என்று
இழுத்தார் பக்தர்.
"இதை அணிந்து கொண்டால், பிறகு பொய்
பேசப்படாது.செய்வியா?" என்றார்கள் ஸ்வாமிகள்.
"அது சிரமம். நானோ வங்கி ஊழியன். என்
மேலதிகாரிகளின் உத்தரவு படிதான் கோப்புகளை
தயார் செய்ய முடியும்.அதில் பொய் கலப்பு
இல்லாமல் இருக்காதே" என்றார் பக்தர்.
"அப்படின்னா, இதை பொய் பேசாதவாளுக்குக்
கொடுத்து விடு" என்றார்கள்.
"என் பார்யாள் சொன்னபடியே ஆய்டுத்து"
என்றார் பக்தர், சிஷ்யர்களிடம்.
"நம்மாத்தில் இருக்கும் ஸ்வாமிகளின் (பெரியவா)
திருவுருவப் படத்துக்குப் போட்டு விடலாம்"
என்றிருக்கிறார் பார்யாள்.
"ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே செய்துடறேன்"
என்றார் பக்தர்.
மனிதனுக்கு ஏதாவது ஒரு சமயம் பொய் பேச
வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
பொய்யே பேசாதவர் என்றால் ஸ்வாமிகளுக்கு
தான் போட வேண்டும் என்று நம்பினார்.
பக்தரின், பார்யாளின் விருப்பத்தையும் ஸ்வாமிகள்
பூர்த்தி செய்து விட்டார்கள்.
எவர் வாய் மூலமாகவும் கேட்காமலே, அந்த
அம்மாளின் விருப்பத்தை எப்படி அறிந்தார்கள்
பெரியவா. அனைத்தும் பெரியவாளின்
ஞான திருஷ்டிதான்.
"அசலும் போலியும் பொருளில் மட்டுமா
..ஆன்மிகத்திலும் இருக்கிறது
..மனிதனுக்கு அநேக முகங்கள்,அவன்
..நல்ல விஷயங்களைப் படிப்பான்
.நல்ல முறையாகப் பேசுவான்-ஆனால்
..படித்தபடியோ,பேசுகிறபடியோ
..நடப்பதேயில்லை,அவனது
..சொல்லும் செயலும் வேறாகவே இருக்கும்."
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment