Thursday, March 5, 2015

..திருவாசகத்தின் உட்பொருளைக் ..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!" - bY kAVIGNAR VALI ON PARAMACHARYA - MAHAPERIYAVA







"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"

(வாலியின் வேண்டல்)

சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கவிஞர் வாலி ஒரு முறை என்னை மகா சுவாமிகளை தரிசிக்க அழைத்துக் கொண்டு போனார். மகா
சுவாமிகளிடம் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு பதில் பெறவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
என்ன கேட்கப் போகிறாரோ என்று எனக்கு உள்ளூர ஓர் ஆவல் குறுகுறுத்தது.

வாலி உள்ளே வந்தார்.அவர்களுக்கு எதிரே ஒரு மூலையில் நின்று கொண்டார். ஒரு குழந்தையைப்
போலத் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினார். 

எதுவுமே பேசவில்லை. தரிசனம் அப்படியே முடிந்தது. வெளியே வந்ததும் அவரிடம், "என்ன ஆயிற்று?
ஏன் அழுது கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டேன்.

"செய்த பாவங்கள் எல்லாம் கண்முன்னே வந்தன. எனக்கு மனசு தாங்கவில்லை. குமுறிக் குமுறி
அழுதேன்!" என்றார் வாலி.

அப்புறம் அந்த அனுபவத்தை ஓர் அற்புதமான கவிதையாக் எழுதிக் கொடுத்தார்.'ஆனந்த விகடனி'ல்
அது பிரசுரமாயிற்று. அந்த வரிகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.

"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"+











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



No comments: