Thursday, March 5, 2015

"பெரியவாளின் சரித்திர ஞானம்"













"பெரியவாளின் சரித்திர ஞானம்"

சொன்னவர்-டாக்டர் ஸி.கே.ராமன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயம் நான் மகா பெரியவாளை தரிசனம்
செய்யப் போன போது அங்கு வயதான ஒருவர்

பெரியவாள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"உங்க பேர்?"

"ராமஸ்வாமி அய்யர்"

"ஊர்?"

"கல்பட்டு"

"திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிறதே அந்தக் கல்பட்டு தானே?"

"ஆமாம்"

"சரி, உங்க ஊருக்கு ஏன் கல்பட்டு என்று பேர் வந்தது தெரியுமா?" (சற்று நேரம் மௌனம்)

"பூர்வீகமே அந்த ஊர் தானே?"

"ஆமாம்"

"பின்னே இது ஏன் தெரியவில்லை?"

"நான் சின்ன வயசிலேயே டெல்லிக்குப் போய்விட்டேன்."

"அதனால் இது தெரியக்கூடாதா?"

"அந்த நாள்ல பல்லவ ராஜாக்கள் எல்லாம் ஆனைகளைக் கட்டறதுக்காக அங்கிருந்துதான் கல்லைக் கொண்டு வருவார்கள். அதனால் தான் அந்த ஊருக்கு கல்பட்டு என்று பேர் வந்தது. இது ரொம்பப் பிரசித்தம்."

மகா பெரியவாளின் இத்துணை நுட்பமான சரித்திர ஞானத்தை நேரில் தெரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: