Thursday, March 5, 2015

தேரை துள்ளி வெளியே வந்தது -- Mahaperiyavaa

சாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.

ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை மூன்றாகப்
பிரித்துள்ளார்கள்.சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்யவேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண்
கற்களால் தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை அறிவார்கள். 

ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே 'இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது' என்று கூறுவார்கள்.

மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும். தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது. ஒரு ஸமயம் ஒரு சிலை
செய்வதற்காக ஒரூ ஸ்தபதி பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.

உடனே பெரியவா "இந்தக் கல்லில் தேரை இருக்கு"என்றார்கள்.
அந்த ஸ்தபதி "இந்தக் கல்லில் தேரை இல்லை என்று தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்"
என்று விவாதம் செய்தான்.

அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள். உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.

இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது 










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos  edited by me.

No comments: