Thursday, May 14, 2015

"தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;


















"தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;
தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு."

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்




தவம் செய்வது என்றால் என்ன?

பத்மாஸனத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்கள்
மூடிக்கொண்டிருப்பது மட்டும் தானா?

ஒரு வாரத்துக்கு மேல், சேர்ந்தாற்போல்,பிட்சையே
செய்யவில்லை, பெரியவாள்.அதனால் உடற்தளர்ச்சி
ஏற்பட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை.
பூஜை செய்வது,தரிசனம் கொடுப்பது. ஸ்ரீமடம்
அதிகாரிகளுக்கு உத்திரவு-எல்லாம் குறைவில்லாமல்
நடந்துகொண்டிருந்தன.

ஆனால், ஸ்ரீமடம் பணியாளர்கள் மனம் தவித்துப்
போய்விட்டார்கள். பெரியவாள் ஒரு டம்ளர் பால்
கூட அருந்தாமல் இருக்கும் போது,இவர்களால்
மட்டும் மனமொப்பி உணவு ஏற்க முடியுமா?

ஒரு கோஷ்டியாகச் சென்று பெரியவாளிடம்
மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டார்கள்.

'யார் என்ன தவறு செய்தார்?' என்பது தெரிந்தால்,
அந்தத் தவறு மீண்டும் நிகழாதபடி கவனமாக
இருக்கலாமே?..

நாள்தோறும் ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வரருக்குப்
பலவகையான நைவேத்தியங்கள் செய்யப்படும்.




சித்ரான்னங்கள்,பாயசம்,வடை-இப்படி எத்தனையோ!

நைவேத்தியம் செய்யும் போது அவைகளின் பெயர்களைக்
கூற வேண்டும்- நாரிகேலோதனம்,திந்த்ரிண்யன்னம்-
தத்யன்னம்,குள பாயஸம்,மாஷாபூபம்.

ஒரு நாளைக்கு, இவைகளைக் கண்ணால் பார்த்து,
மனத்தால் சொல்லிக்கொண்டிருக்கும் போது.....'

- பெரியவாள் தொண்டையின் பந்து ஏறி இறங்கியது.

"என் நாக்கு ஊறியது..தவிச்சுப்போயிட்டேன்-
நாக்கை வளரவிட்டு விட்டோமே-ன்னு,




நாக்கை அடக்குவதற்காகத்தான் இந்தப் பிராயச்சித்தம்.
இப்போ, நாக்கு அடங்கிப் போச்சு!..."

சிப்பந்திகள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.
நாளையிலேர்ந்து பிட்சை செய்யலாம்.'

தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;
தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு.

















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: