ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்"
ரா.கணபதி நேரில் கேட்ட அற்புத நிகழ்வு.
ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றிப் பல கூறியதிலிருந்து: “நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம். அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது” என்றார்.
மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமன்றி கந்தனின் பிதா நரஸிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்து வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார்.
“அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணவைதிகம்” என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர்.
“அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு சிரிச்சுக்கிண்டு சாந்தமாகவே இருந்துடுவார்.
“நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுக்கொண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்குக் கொஞ்சங்கூட அந்த ட்ரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி 2 ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது.
“பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends. இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்அ தினுஸு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்ம வெறும் நாள்லயே ஏறக்கொறய தெவச மடி பார்க்கரவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்றேளே, அந்த மாதிரி(2. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயஸானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.”
பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!”
அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது.
காந்தன் அத்யயனம் ஆரம்பித்துச் சிரித்து காலத்திலேயே அவருடைய பிதா பித்ருலோகம் ஏகிவிட்டார்
------------------------------------------
Courtesy : Facebook - Mahaperiyava bhakta and also photos.
No comments:
Post a Comment