பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய
ஒரு பெரியவாள் அவதாரம் பண்ணப்போகிறார்"
சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)
பெரியவா, "என்னவோ சொல்லணும்னு நினைக்கிறே!
சொல்லிவிடேன்."
"பெரியவாளிடம் என்ன சொல்ல முடியும்.
ஸ்ரீதர ஐயாவாள் சுலோகம் ஒன்று நினைவுக்கு வரது"
"ஐயாவாள் சுலோகமா? பக்திரஸம் கொட்டுமே!
சொல்லு பார்க்கலாம்."
" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :
"இன்னொரு தடவை சொல்லு!..."
" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :
"எங்கே அர்த்தம் சொல்லு பார்க்கலாம்"
"இளம்பிறைச் சந்திரனைத் தலையில் சூடிக்கொண்ட
பெருமானே! உலகில் எல்லாரும் சொல்வார்கள்.-
சிவசிவ என்கிற மதுரமான நாமத்தை ரஸித்துச்
சொல்பவர்கள் துயரப்படமாட்டார்கள் என்று.
அது வெறும் பேச்சுதான். உண்மையிலே-
மனுஷனாகட்டும்,பசு-பூச்சியாகட்
கஷ்டப்படுவது அவர்களுடைய கண்களில் பட்டு விட்டால்,
அந்தக் கஷ்டம் தனக்கே வந்து விட்டது போல
உருகி விடுவார்கள்"
"நன்னாச் சொன்னே! அதிலே ஒரு ஸ்வாரஸ்யம்
கூட இருக்கு. கவனித்தாயா!"
"என்ன? நான் கவனிக்கவில்லையே!"
'தருணேந்து மௌலே - என்கிறார்.
நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார்.
அவருடைய குருநாதர் போதேந்த்ர ஸரஸ்வதி பூஜை பண்ணின
மூர்த்திதானே சந்த்ரமௌளீச்வரர்.அவரிடம்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள்.
..............................
கட்டுரையாளர்; இவன் உதட்டிலே ஒன்று சொல்ல வேண்டுமென்று
ஒரு துடிப்பு வந்தது.சொல்லியிருந்தால் அபசாரமாகுமோ,என்னவோ?
நமக்குள்ளே பரிமாறிக்கலாமே!
முன்னூற்றைம்பது வருஷங்கள் முன்னால் இருந்த ஸ்ரீதர ஐயாவாள்,
பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய ஒரு பெரியவாள்
அவதாரம் பண்ணப்போகிறார் என்று,அந்த சந்த்ரமௌலீசுவரரிடம்
விண்ணப்பித்திருக்கிறாரே.!
..............................
பின்குறிப்பு- இந்த கட்டுரையே பிறர் கஷ்டத்தை பார்த்து மனம்
வேதனைப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடக்கும் சம்பாஷணை.
சம்பவம் பெரிதாக இருந்ததால் அதை தட்டச்சு செய்யவில்லை.
பிறிதொரு சமயம் அதையும் இங்கே போஸ்ட் பண்ணுவேன்
வரகூரான்)
Courtesy : Facebook post : Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
No comments:
Post a Comment