Thursday, February 12, 2015

மகான்களுள் மகான். -- ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் -- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் -Sri Gnananadha Giri swamigal - Sringeri Sri Abinava vidya thirtha swamigal







மகான்களுள் மகான்
தபோவனத்தில் ஒரு நாள் காலை பூஜைகள் முடிந்தவுடன் குருநாதர் அங்கிருந்த அனைவரையும் பிரதான வாயிலில் நிற்கச்சொல்லி, 'இன்னும் சற்று நேரத்தில் இங்கு ஒரு பெரியவர் வருகிறார். அவரை சகல மரியாதைகளுடன் அழைத்துவருவோம்'என்று ஆணையிட்டார். அதன்படி நாங்கள் அனைவரும் வாயிலில் நிற்க சிறிது நேரத்திற்க்கெல்லாம் அப்போது சிரிங்கேறி சாரதா பீடத்தின் மஹா சன்னிதானமாக அருளாட்சிசெய்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அங்கு வந்தார். நாங்கள் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்லும்போது, பிரகாரத்திலேயே சுவாமி அவரை வரவேற்க வந்ததை பார்த்தவுடன், ஆசார்யாள் தன், தண்டத்தை சுவாமியிடம் கொடுத்து நமச்காரம் பண்ண முயற்சித்த சமயம், சுவாமி 'பஹிர்முகமாக நம்சகாரம் தேவையில்லை. அந்தர்முகமாக வைத்துக்கொள்வோம' என்று கூறினார். அப்போது ஆசார்யாள், 'எங்களுக்கெல்லாம் தாத்தாவான உங்களை பஹிர்முகமாக நமஸ்காரம் செய்வதில் தவறு இல்லை' என்று கூறி வணங்கினார். ஜோதி ஜோதியை வணங்கியது. ஆன்மிகத்தின் இரு ரத்தினங்கள் அங்கே நின்ற காட்சி இரு சூரியன்கள் அங்கே உதித்தது போன்ற ஒளிப்பிரகாசம். அந்த ஞான சூரியன்களை ஒருமித்து கண்ட கண்கள் என்ன பேரு செய்தனவோ? எத்தனை ஜன்மங்கள் தவமோ? என்று எண்ணி நாங்கள் வியந்தோம். இந்நிகழ்ச்சியினால் நம் குருநாதர் பல மகான்களால் போற்றப்பட்ட மஹா குருவாக விளங்கியது நமக்கு புரிகிறது.









No comments: